ADDED : செப் 03, 2026 10:11 PM

லண்டன்: லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை அனாஹத் சிங் முன்னேறினார்.
லண்டனில், கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 2வது சுற்றில், உலகின் 'நம்பர்-20' இந்தியாவின் அனாஹத் சிங், 11வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் நேலே கிலிஸ் மோதினர். முதல் செட்டை 13-11 என போராடி கைப்பற்றிய அனாஹத், இரண்டாவது செட்டை 4-11 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட அனாஹத் 11-8 என வென்றார். மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அனாஹத் 2-1 (13-11, 4-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான 2வது சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், இங்கிலாந்தின் முகமது எல் ஷோர்பாகி மோதினர். இதில் ஏமாற்றிய ரமித் டான்டன் 0-2 (10-12, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
