தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வான்கூவர்-மான்ட்ரியல் 'டிரா'

வான்கூவர்-மான்ட்ரியல் 'டிரா'

வான்கூவர்-மான்ட்ரியல் 'டிரா'


ADDED : செப் 03, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 10:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வான்கூவர்: கனடாவில், சாம்பியன்ஷிப் கால்பந்து 19வது சீசன் நடக்கிறது. வான்கூவர் நகரில் நடந்த அரையிறுதிக்கான முதல் போட்டியில், வான்கூவர் ஒயிட்கேப்ஸ், மான்ட்ரியல் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. ரியான் ஸ்டீவர்ட் கால்ட் (வான்கூவர்), டேனியல் பெரேரா கில் (மான்ட்ரியல்) தலா ஒரு கோல் அடித்தனர். இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி செப். 16ல் மான்ட்ரியல் நகரில் நடக்கவுள்ளது.

அமெரிக்க வீராங்கனை காயம்

வாஷிங்டன்: அமெரிக்க நீளம் தாண்டுதல் வீராங்கனை டாரா டேவிஸ்-உட்ஹால் 27. ஒலிம்பிக் (2024, பாரிஸ்), உலக சாம்பியன்ஷிப் (2025, டோக்கியோ) போட்டியில் தங்கம் வென்றிருந்தார். சமீபத்தில் பயிற்சிக்கு காரில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதியதில் மூளை அதிர்ச்சிக்கு உள்ளார். தவிர இவரது முழங்கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் வரும் செப். 11-13ல் ஹங்கேரியில் நடக்கவுள்ள உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* சீனாவில், ஜூனியர் (21 வயது) ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி, இந்தோனேஷியா (செப். 5), ஜப்பான் (செப். 6), தென் கொரியா (செப். 8), சீனதைபே (செப். 9) அணிகளை சந்திக்கிறது. 'எலைட்' பிரிவில் உள்ள இந்திய பெண்கள் அணி, தென் கொரியா (செப். 5), மலேசியா (செப். 6), ஜப்பான் (செப். 8), சீனாவை (செப். 9) எதிர்கொள்கிறது. இந்திய அணிகள் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகின்றன.

* இந்தியாவில் முதன் முறையாக பெண்கள் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ('பி' பிரிவு') நடக்கவுள்ளது. இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில், வியட்நாம் (ஹோ சி மின் சிட்டி, நவ. 1), தென் கொரியா (ஹவாச்சியோன், நவ. 4), வடகொரியா (4.25 எஸ்.சி., நவ. 7) கால்பந்து கிளப் அணிகளுடன் விளையாடுகிறது. போட்டிகள் கொல்கட்டாவில் நடக்கும்.

* தாய்லாந்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 6-1, 6-4 என, ஜப்பானின் சுமிஜாவாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6-0, 6-2 என, ஆஸ்திரேலியாவின் சென் டாங்கை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us