உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 02, 2026 10:04 PM

அ நிறம் | அளவு
லண்டன்: லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரின் 2வது சுற்றுக்கு இந்தியாவின் அனாஹத், ரமித் டான்டன் முன்னேறினர்.
லண்டனில், கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மரியம் மெட்வாலி மோதினர். மொத்தம் 11 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அனாஹத் 2-0 (11-3, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், கத்தாரின் அப்துல்லா அல்-தாமிமி மோதினர். இதில் ரமித் டான்டன் 2-0 (11-6, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, சுவிட்சர்லாந்தின் யானிக் வில்ஹெல்மி மோதினர். இதில் வீர் சோட்ரானி 0-2 (9-11, 9-11) என தோல்வியடைந்தார்.
