தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/போலார்டு, பிராவோ 'கேலரி'

போலார்டு, பிராவோ 'கேலரி'

போலார்டு, பிராவோ 'கேலரி'


ADDED : செப் 02, 2026 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 10:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீசில் உள்ள டிரினிடாட் அண்டு டுபாகோவின் 64வது சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது. இதையடுத்து டிரினிடாட்டை சேர்ந்த போலார்டு (751 'டி-20'ல், 14,933 ரன், 341 விக்கெட்), டுவைன் பிராவோ (582ல் 6970 ரன், 631 விக்.,), சுனில் நரைன் (614ல் 650 விக்.,) என மூன்று கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்கும் வகையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தின் 'கேலரிகளுக்கு' இவர்களது பெயர்கள் சூட்டப்பட்டன.

பார்படாஸ் அணி ஏமாற்றம்

செயின்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் ('டி-20') 14வது சீசன் நடக்கிறது. செயின்ட் கிட்ஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் பார்படாஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் அணிகள் மோதின. குயின்டன் டி காக் (106) கைகொடுக்க, பார்படாஸ் அணி 20 ஓவரில் 217/4 ரன் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (78) நல்ல துவக்கம் கொடுக்க, 19.1 ஓவரில் 220/4 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பர்மிங்காம் சிட்டி 'டிரா'

லண்டன்: இங்கிலாந்தில், கால்பந்து லீக் சாம்பியன்ஷிப் 11வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பர்மிங்காம் சிட்டி, சவுத்தாம்ப்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் ஸ்டோக் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் நார்விச் சிட்டி அணியை வீழ்த்தியது. நான்கு போட்டியில், ஒரு வெற்றி, 3 'டிரா' என 6 புள்ளிகளுடன் பர்மிங்காம் அணி 9வது இடத்தில் உள்ளது. சவுத்தாம்ப்டன் அணி (3 புள்ளி) 17வது இடத்தில் உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* கொல்கட்டாவில், வரும் அக். 3ல் இந்தியா, பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச நட்பு கால்பந்து போட்டி நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை 'ஆன்-லைனில்' துவங்கியது. டிக்கெட் விலை ரூ. 999 முதல் ரூ. 15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்திற்குள் விற்றுத்தீர்ந்தன.

* மொகாலியில் நடந்த பஞ்சாப் பிரிமியர் லீக் ('டி-20') தொடருக்கான லீக் போட்டியில், ஜலந்தர் வாரியர்ஸ் அணி (265/2), 8 விக்கெட் வித்தியாசத்தில் அமிர்தசரஸ் சூர்மாஸ் அணியை (264/5) வீழ்த்தியது. ஜலந்தர் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 47 பந்தில், 125 ரன் (8X6, 14X4) எடுத்து கைகொடுத்தார்.

* கனடாவில் நடந்த பான் அமெரிக்க கோப்பை பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பைனலில், இந்தியாவின் துருவ் சிட்வாலா 972-1500 என்ற கணக்கில் சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட்டிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us