/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கர் 'சாம்பியன்'
/
நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கர் 'சாம்பியன்'
ADDED : ஜூலை 20, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மையா: சர்வதேச தடகளத்தின் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் சாம்பியன் பட்டம் வென்றார்.
போர்ச்சுகலில், 'வேர்ல்டு கான்டினென்டல் டூர்' சர்வதேச தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 26, பங்கேற்றார். கேரளாவை சேர்ந்த இவர், தனது முதலிரண்டு வாய்ப்புகளில் 7.63, 7.75 மீ., தாண்டினார். மூன்றாவது வாய்ப்பை 'பவுல்' செய்து வீணடித்த ஸ்ரீசங்கர், அடுத்த இரு வாய்ப்புகளில் 6.12, 7.58 மீ., தாண்டினார்.
அதிகபட்சமாக 7.75 மீ., தாண்டிய ஸ்ரீசங்கர் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். போலந்தின் பியோட்டர் டார்கோவ்ஸ்கி (7.58 மீ.,) 2வது இடம் பிடித்தார்.