/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான்: ரிச்ட்மேன் முதலிடம்
/
லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான்: ரிச்ட்மேன் முதலிடம்
ADDED : மார் 17, 2025 09:30 PM

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தானில் அமெரிக்காவின் ரிச்ட்மேன் முதலிடம் பிடித்தார்.
அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தான் ஓட்டம் நடந்தது. பந்தய துாரத்தை 2 மணி நேரம், 7 நிமிடம், 56 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த அமெரிக்க வீரர் மாட் ரிச்ட்மேன், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். லாஸ் ஏஞ்சல்ஸ் மாரத்தானில் 31 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரரானார் ரிச்ட்மேன். கடைசியாக 1994ல் அமெரிக்காவின் பால் பில்கிங்டன் (2 மணி நேரம், 30 நிமிடம், 16 வினாடி) சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர இவர், மாரத்தானில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். சமீபத்தில் டுவின் சிட்டி மாரத்தானில் அறிமுகமான இவர், இலக்கை 2 மணி நேரம், 10 நிமிடம், 13 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்திருந்தார்.
கென்யாவின் அதானஸ் கியோகோ (2:10.55), மோசஸ் குர்கட் (2:13.13) முறையே 2, 3வது இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் கென்யாவின் தேஜினேஷ் துளு (2 மணி நேரம், 30 நிமிடம், 16 வினாடி) முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை கென்யாவின் அன்டோனினா குவாம்பாய் (2:30.19), அமெரிக்காவின் சவன்னா பெர்ரி (2:30.31) பிடித்தனர்.