
மக்காவ்: உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, லீக் சுற்றோடு வெளியேறினர்.
சீனாவின் மக்காவ் நகரில் உலக கோப்பை (ஒற்றையர்) டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பங்கேற்றனர்.
'குரூப்-2' பிரிவு 2வது லீக் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, உலகின் 'நம்பர்-2' சீனாவின் வாங் மான்யு மோதினர். இதில் ஏமாற்றிய மணிகா 0-4 (6-11, 4-11, 9-11, 4-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
'குரூப்-4' பிரிவு 2வது லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, 'நடப்பு சாம்பியன்', உலகின் 'நம்பர்-4' சீனாவின் சென் மெங் மோதினர். இதில் ஸ்ரீஜா 1-3(4-11, 4-11, 15-13, 2-11) என தோல்வியடைந்தார்.
இருவரும் முதல் லீக் போட்டியில் தோல்வியடைந்ததால் 'நாக்-அவுட்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினர். இருப்பினும் 40 'ரேங்கிங்' புள்ளி கூடுதலாக பெற உள்ள ஸ்ரீஜா, அடுத்து வெளியாகும் உலக தரவரிசையில் மணிகா பத்ராவை முந்தி இந்தியாவின் 'நம்பர்-1' டேபிள் டென்னிஸ் வீராங்கனையாக வலம் வர உள்ளார்.

