உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 30, 2026 03:53 AM

அ நிறம் | அளவு
டாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானில், உலக கோப்பை குத்துச்சண்டை பைனல்ஸ் நடக்கிறது. பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில், இந்தியாவின் மீனாட்சி ஹூடா, இத்தாலியின் மார்டினா வசல்லோ மோதினர்.
அபாரமாக ஆடிய மீனாட்சி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் (85 கிலோ) இந்திய வீராங்கனை நைனா 3–2 என, கஜகஸ்தானின் வலேரியா ஆக்செனோவாவை வீழ்த்தினார்.
இந்திய வீரர் மல்சா (80 கிலோ) 3–2 என ரஷ்யாவின் பெஷ்டோ ஷாவ்லேவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரிஷி சிங் 5–0 என, ஆர்மேனியாவின் ருடோல்ப் கார்போயனை தோற்கடித்தார்.
