தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி வென்றார் தான்வி: சையது மோடி பாட்மின்டனில்

வெள்ளி வென்றார் தான்வி: சையது மோடி பாட்மின்டனில்

வெள்ளி வென்றார் தான்வி: சையது மோடி பாட்மின்டனில்


ADDED : நவ 30, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2026 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் இரட்டையரில் காயத்ரி, திரீசா ஜோடி, ஒற்றையரில் தான்வி சர்மா வெள்ளி வென்றனர்.

உ.பி.,யின் லக்னோவில், ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் தான்வி சர்மா, தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங் மோதினர். முதல் செட்டை 21–11 எனக் கைப்பற்றிய தான்வி, 2வது செட்டை 12–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய தான்வி, 15–21 எனக் கோட்டைவிட்டார்.

மொத்தம் 54 நிமிடம் நடந்த போட்டியில் தான்வி சர்மா 21–11, 12–21, 15–21 என தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்தோனேஷியாவின் இஸ்யானா சியாஹிரா, ரிஞ்சானி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 24–22 என போராடி கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 12–21 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இந்திய ஜோடி 19–21 என போராடி கோட்டைவிட்டது.

ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த பைனலில் திரீசா, காயத்ரி ஜோடி 24–22, 12–21, 19–21 என தோல்வியடைந்து, ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து, வெள்ளி பதக்கம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us