sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மீராபாய் சானு தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு

/

மீராபாய் சானு தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு

மீராபாய் சானு தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு

மீராபாய் சானு தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு

1


ADDED : ஏப் 01, 2024 10:03 PM

Google News

ADDED : ஏப் 01, 2024 10:03 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகெட்: பாரிஸ் ஒலிம்பிக் பளுதுாக்குதல் போட்டிக்கு இந்திய வீராங்கனை மீராபாய் சானு தகுதி பெற்றார்.

தாய்லாந்தில் உலக கோப்பை பளுதுாக்குதல் நடக்கிறது. பெண்களுக்கான 49 கிலோ 'குரூப்-பி' பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 29, பங்கேற்றார். காயத்தில் இருந்து மீண்டு, 6 மாதங்களுக்கு பின் போட்டிக்கு திரும்பிய இவர், மொத்தம் 184 கிலோ ('ஸ்னாட்ச்' 81 + 'கிளீன் அன்ட் ஜெர்க்' 103 கிலோ) பளுதுாக்கி 3வது இடம் பிடித்தார். 49 கிலோ எடைப்பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்று தரவரிசையில் 2வது இடம் பிடித்த மீராபாய் சானு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் பளுதுாக்குதல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியரான இவர், மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் (2016) ஏமாற்றிய இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டில் இரண்டு தங்கம் (2018, 2022), ஒரு வெள்ளி (2014) வென்ற மீராபாய் சானு, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் இரண்டு பதக்கம் (2017ல் தங்கம், 2022ல் வெள்ளி) வென்றிருந்தார். தவிர இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (2020ல் வெண்கலம்), காமன்வெல்த் சாம்பியன்ஷிப் (2013, 2017, 2019ல் தங்கம், 2015ல் வெள்ளி) போட்டிகளிலும் பதக்கங்களை கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us