/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
முரளி ஸ்ரீசங்கர் 'தங்கம்': நீளம் தாண்டுதலில் அசத்தல்
/
முரளி ஸ்ரீசங்கர் 'தங்கம்': நீளம் தாண்டுதலில் அசத்தல்
முரளி ஸ்ரீசங்கர் 'தங்கம்': நீளம் தாண்டுதலில் அசத்தல்
முரளி ஸ்ரீசங்கர் 'தங்கம்': நீளம் தாண்டுதலில் அசத்தல்
ADDED : ஆக 03, 2025 09:58 PM

அல்மாட்டி: சர்வதேச தடகளத்தின் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்.
கஜகஸ்தானில், சர்வதேச தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 7.94 மீ., தாண்டிய இவர், அடுத்த 5 வாய்ப்புகளில் 7.73, 7.58, 7.57, 7.80, 7.79 மீ., தாண்டினார். அதிகபட்சமாக 7.94 மீ., தாண்டிய முரளி ஸ்ரீசங்கர், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடந்த ஆண்டு முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட ஸ்ரீசங்கர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து பூரண குணமடைந்து போட்டிக்கு திரும்பிய இவர், இந்திய ஓபன் (8.05 மீ.,), போர்ச்சுகல் தடகளத்தில் (7.75 மீ.,) தங்கம் கைப்பற்றினார். தற்போது கஜகஸ்தானிலும் அசத்திய இவர், 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.