/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தேசிய வில்வித்தை: தீபிகா 'சாம்பியன்'
/
தேசிய வில்வித்தை: தீபிகா 'சாம்பியன்'
ADDED : டிச 20, 2024 10:30 PM

ஜாம்ஷெட்பூர்: சீனியர் தேசிய வில்வித்தையில் தீபிகா குமாரி, திராஜ் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், சீனியர் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (பி.எஸ்.பி.பி.,) அணியின் தீபிகா குமாரி, ஜார்க்கண்ட் வீராங்கனை அன்கிதா பகத் மோதினர். இதில் தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜீத் கவுர் 7-1 என குஜராத்தின் பார்கவியை வீழ்த்தினார்.
ஆண்கள் தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் திராஜ், ஹரியானாவின் திவ்யான்ஷ் சவுத்தரி மோதினர். இதில் திராஜ் 6-2 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். உத்தரகாண்ட்டின் அடுல் வர்மா வெண்கலம் வென்றார்.
கலப்பு அணிகள் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் தீபிகா குமாரி, அடானு தாஸ் அடங்கிய பெட்ரோலிய அணி 6-2 என பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆண்கள், பெண்கள் அணிகள் 'ரீகர்வ்' பிரிவில் முறையே ரயில்வேஸ், ஜார்க்கண்ட் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.