/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தேசிய ஹாக்கி லீக்: ஹரியானா அணி வெற்றி
/
தேசிய ஹாக்கி லீக்: ஹரியானா அணி வெற்றி
ADDED : மே 01, 2024 10:42 PM

ராஞ்சி: பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் போட்டியில் ஹரியானா, மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்றன.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஹரியானா, மணிப்பூர் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த 'தேசிய சாம்பியன்' ஹரியானா அணி 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஹரியானா அணிக்கு ஷாசி காசா (49, 50, 56வது நிமிடம்), ரித்திகா (17, 29வது), பூஜா (2வது), மஞ்சு சோர்சியா (20வது), ப்டெரி (37வது) கைகொடுத்தனர். இது, ஹரியானாவின் முதல் வெற்றி. முதல் போட்டியில் ஒடிசா அணியிடம் தோல்வியடைந்திருந்தது.
மற்றொரு போட்டியில் மிசோரம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் தனுஸ்ரீ (13வது நிமிடம்), மோனிகா டிர்கி (26வது), அஷ்வினி (50வது) கைகொடுக்க மகாராஷ்டிரா அணி 3-0 என வெற்றி பெற்றது. இது மகாராஷ்டிரா அணியின் 2வது வெற்றி. முதல் போட்டியில் மணிப்பூரை வென்றிருந்தது.