/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தேசிய மினி ரோல் பால் போட்டி: கோவை மாணவர்கள் அசத்தல்
/
தேசிய மினி ரோல் பால் போட்டி: கோவை மாணவர்கள் அசத்தல்
தேசிய மினி ரோல் பால் போட்டி: கோவை மாணவர்கள் அசத்தல்
தேசிய மினி ரோல் பால் போட்டி: கோவை மாணவர்கள் அசத்தல்
UPDATED : ஜன 27, 2025 11:11 PM
ADDED : ஜன 26, 2025 10:59 PM

கவுகாத்தி: தேசிய 'மினி ரோல் பால்' சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக அணிகள் வெண்கலம் வென்றன. இதில் கோவை மாணவர்கள் அசத்தினர்.
அசாமின் கவுகாத்தியில், 11 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தேசிய 'மினி ரோல் பால்' சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடந்தது. சிறுவர்களுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, காலிறுதியில் 5-3 என ராஜஸ்தானை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் தமிழக அணி 2-7 என அசாமிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
சிறுமிகளுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, காலிறுதியில் 3-1 என்ற கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் தமிழக அணி 3-5 என ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது.
தமிழக அணியில் கோவையை சேர்ந்த மாணவிகள் அதிதி (பிராக்ரியா சர்வதேச பள்ளி), ஹர்னிகா (கேம்போர்ட் சர்வதேச பள்ளி), கேப்டன் லியா கார்த்திக் (எஸ்.எஸ்.வி.எம். பள்ளி), தன்வி எஸ் ஜுமானி (பி.எஸ்.ஜி. பப்ளிக் ஸ்கூல்), சாஸ்திகா (ஜி.ஆர்.டி. பப்ளிக் ஸ்கூல்), மாணவர் ஹர்ஷீத் (கேம்போர்ட் சர்வதேச பள்ளி) இடம் பெற்றிருந்தனர்.
பதக்கம் வென்ற தமிழக சிறுவர், சிறுமிகளுக்கு, தென்னிந்திய 'ரோல் பால்' செயலர் சுப்ரமணியம், தமிழக செயலர் கோவிந்தராஜன், துணை தலைவர் பிரேம் நாத் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராஜசேகர் கூறுகையில், ''தமிழகத்துக்கு பதக்கம் பெற்றுத்தந்துள்ள இளம் நட்சத்திரங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். சிறுவர் பிரிவில் தொடர்ச்சியாக 2வது முறையும், சிறுமியர் பிரிவில் 6 ஆண்டுகளுக்கு பின் பதக்கம் கிடைத்துள்ளன. 'ரோல் பால்' விளையாடுவது எளிதானதல்ல. உடல் வலிமை அவசியம்,'' என்றார்.