/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஆத்யா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
/
தங்கம் வென்றார் ஆத்யா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் ஆத்யா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் ஆத்யா * தேசிய துப்பாக்கிசுடுதலில்...
ADDED : டிச 30, 2025 10:51 PM

புதுடில்லி: தேசிய துப்பாக்கி சுடுதலில் 15 வயது ஆத்யா தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவு தகுதிச் சுற்றில் டில்லியை சேர்ந்த ஆத்யா கட்யல், 112 முறை இலக்கை தாக்கினார். முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். டில்லியின் பாவ்யா (110), தமிழகத்தின் தனிஷ்கா (105), ராஜஸ்தானின் தர்ஷனா (104), உ.பி., யின் சபீரா (102), டில்லியின் அனன்யா (101) என 'டாப்-6' வீராங்கனைகள் பைனலுக்குள் நுழைந்தனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஆத்யா, 42 முறை இலக்கை தாக்கி, முதலிடம் பெற்று தங்கம் தட்டிச் சென்றார். சபீரா (41) வெள்ளி வென்றார். தமிழகத்தின் தனிஷ்கா (28) வெண்கலம் வசப்படுத்தினார்.
தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற பாவ்யாவுக்கு ஆறாவது, கடைசி இடம் தான் கிடைத்தது.
அணிகளுக்கான பிரிவில் தமிழகத்தின் தனிஷ்கா, நிலா, ஆந்த்ரா இடம் பெற்ற அணி, 295 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றது. டில்லியின் ஆத்யா, பாவ்யா, அனன்யா (323) இடம் பெற்ற அணி தங்கம் வென்றது. 274 புள்ளி எடுத்த ராஜஸ்தானுக்கு (தர்ஷனா, மைத்ரேயி, மஹிகா) வெண்கலம் கிடைத்தது.

