/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
யாதேஷ், தனுஷ் அசத்தல் * தேசிய விளையாட்டு நீச்சலில்...
/
யாதேஷ், தனுஷ் அசத்தல் * தேசிய விளையாட்டு நீச்சலில்...
யாதேஷ், தனுஷ் அசத்தல் * தேசிய விளையாட்டு நீச்சலில்...
யாதேஷ், தனுஷ் அசத்தல் * தேசிய விளையாட்டு நீச்சலில்...
ADDED : பிப் 01, 2025 11:17 PM

ஹல்டுவானி: தேசிய விளையாட்டு நீச்சலில் தமிழக வீரர்கள் யாதேஷ் வெள்ளி, தனுஷ் வெண்கலம் வென்றனர்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்களுக்கான நீச்சலில், 50 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' போட்டி நடந்தது. இதில் தமிழக வீரர் யாதேஷ் பாபு, 29.20 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் தனுஷ் (29.21) வெண்கலம் வென்றார். கர்நாடகாவின் விதித் ஷங்கர் (21.12) தங்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 4x200 மீ., பிரீஸ்டைல் ரிலே போட்டியில் தமிழகத்தின் தீக்சா, ஆத்விகா, தயானிதா, ஸ்ரீநிதி இடம் பெற்ற அணி, 9 நிமிடம், 14.27 வினாடி நேரத்தில் வந்து வெண்கலப் பதக்கம் வென்றது.
தினிதி 'ஐந்து'
கர்நாடாகாவின் 14 வயது வீராங்கனை தினிதி, ஷிரின், ஷாலினி, மீனாட்சி இடம் பெற்ற அணி, 4x200 மீ., பிரீஸ்டைல் ரிலே போட்டியில் தங்கப்பதக்கம் (8.54.87) கைப்பற்றியது. இந்த தேசிய விளையாட்டில் தினிதி வென்ற ஐந்தாவது தங்கப்பதக்கம் இது ஆனது.