/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
விளையாடுங்க... உடல் பலமாகுங்க * மூன்று நாள் கொண்டாடுங்க
/
விளையாடுங்க... உடல் பலமாகுங்க * மூன்று நாள் கொண்டாடுங்க
விளையாடுங்க... உடல் பலமாகுங்க * மூன்று நாள் கொண்டாடுங்க
விளையாடுங்க... உடல் பலமாகுங்க * மூன்று நாள் கொண்டாடுங்க
ADDED : ஆக 26, 2025 11:10 PM

புதுடில்லி: தேசிய விளையாட்டு தினம் மூன்று நாளுக்கு, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த். 1905, ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். தனது மந்திர ஆட்டத்தால் 1928, 1932, 1936ல் இந்திய அணி தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். இவரது பெயரில் விளையாட்டின் உயர்ந்த 'தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது. இவரது பிறந்தநாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் இலக்கு
சமீப காலமாக உலக விளையாட்டு அரங்கில் இந்தியா முத்திரை பதிக்கிறது. கிரிக்கெட்டில் நான்கு உலக கோப்பை (1983, 2007, 2011, 2024) ஒலிம்பிக் ஹாக்கியில் 8 தங்கம்,1 வெள்ளி, 3 வெண்கலம், ஈட்டி எறிதலில் 'தங்கமகன்' நீரஜ் சோப்ரா, பாட்மின்டனில் சிந்து, செஸ் போட்டிகளில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, துப்பாக்கி சுடுதலில் மனு பாகர், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக், குத்துச்சண்டையில் லவ்லினா என பலர் சாதிக்கின்றனர். இந்தியாவில் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான முயற்சி நடக்கிறது. இந்தியாவை 'விளையாட்டு வல்லரசாக' மாற்றுவதே பிரதமர் மோடியின் கனவாக உள்ளது.
ஒரு மணி நேரம்
இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்,''நமது ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த், இவரை கவுரவிக்கும் விதமாக, தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மூன்று நாள் (ஆக. 29-31) கொண்டாட முடிவு செய்துள்ளோம். 'மைதானத்தில் ஒரு மணி நேரம் விளையாடுவது' என்பது இந்த ஆண்டின் மையக்கருத்து. ஆரோக்கியமான மக்களால் தான் வளமான இந்தியாவை கட்டமைக்க முடியும் என பிரதமர் மோடி நம்புகிறார். இதற்கு ஏற்ப மாணவர்கள், நிறுவன ஊழியர்கள் என அனைவரும் மைதானத்திற்கு சென்று உடல் செயல்பாடுகளுக்கு ஒரு மணி நேரத்தை அர்ப்பணிக்கவும்.
இந்த இயக்கத்தில் இந்திய ஒலிம்பிக், பாராலிம்பிக் நட்சத்திரங்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பர். கிராம, மாவட்ட அளவிலான மைதானங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,''என்றார்.
மூன்று நாள் எப்படி
ஆக. 29: மறைந்த 'ஹாக்கி மந்திரவாதி' தயான் சந்த், நினைவு அஞ்சலி. உடற்தகுதியை வலியுறுத்தும் 'பிட் இந்தியா' உறுதிமொழி ஏற்பது. மைதானத்திற்கு சென்று ஒரு மணி நேரம் ஏதாவது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது.
ஆக. 30: விளையாட்டு தொடர்பான கருத்தரங்கு, கோ-கோ, கபடி, வாலிபால், சாக்கு பை ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல் போன்ற உள்ளூரில் பிரபலமான போட்டிகள் நடத்தப்படும்.
ஆக. 31: வாழ்க்கையின் ஒரு அங்கமாக சைக்கிள் ஓட்டுதல் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் ஓட்டுதல் சிறந்தது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
-தேசிய விளையாட்டு தினம் (ஆக. 29)

