/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நார்வே செஸ்: அர்ஜுன் வெற்றி
/
நார்வே செஸ்: அர்ஜுன் வெற்றி
ADDED : மே 28, 2025 10:51 PM

ஸ்டாவஞ்சர்: நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் மோதினர். அர்ஜுன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
போட்டியின் 26 வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, வாய்ப்பை பயன்படுத்திய அர்ஜுன், ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 62வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
இரண்டு சுற்று முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா (4.5), அர்ஜுன் (4.5), கார்ல்சன் (4.0) முதல் 3 இடத்தில் உள்ளனர். குகேஷ் (0) கடைசி இடத்தில் (6) உள்ளார்.
ஹம்பி அபாரம்
பெண்களுக்கான இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீ மோதிய போட்டி 'டிரா' ஆனது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'டை பிரேக்கர்' போட்டியும் 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹம்பி, உக்ரைனின் அனா முஜிசக்கிடம் தோல்வியடைந்தார். இரண்டு சுற்று முடிவில் அனா முஜிசக் (4.5), சீனாவின் டிங்ஜீ (3.0), ஹம்பி (3.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். வைஷாலி (1.0) கடைசி இடத்தில் உள்ளார்.