/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு * பிரான்சில் ரசிகர்கள் உற்சாகம்
/
ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு * பிரான்சில் ரசிகர்கள் உற்சாகம்
ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு * பிரான்சில் ரசிகர்கள் உற்சாகம்
ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு * பிரான்சில் ரசிகர்கள் உற்சாகம்
ADDED : மே 08, 2024 10:51 PM

மார்செய்லே: பிரான்சின் மார்செய்லே துறைமுகத்துக்கு வந்த ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஒலிம்பிக் ஜோதி கிரீசின் பாரம்பரிய ஒலிம்பியா என்ற இடத்தில் ஏற்றப்பட்டது. கிரீசில் பயணம் செய்த இந்த ஜோதி, பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின், கிரீசில் இருந்து 1986 முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மூன்றடுக்கு பாய்மரப்படகு 'பெலேமில்' ஏற்றப்பட்டது. அங்கிருந்து 12 நாள் கடலில் பயணம் செய்த ஒலிம்பிக் ஜோதி, நேற்று பிரான்சின் மார்செய்லி பழைய துறைமுக நகரத்தை அடைந்தது. இதனுடன் ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் அணிவகுத்து வந்தன.
பலத்த பாதுகாப்பு
பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்செய்லேயில் இரவு நடக்கவுள்ள ஒலிம்பிக் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியில் 1,50,000 பேர் பங்கேற்க உள்ளனர். 2,600 ஆண்டுக்கு முன் கிரேக்க காலனி ஆதிக்கத்தில் நகரம் இருந்ததை நினைவு கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.
தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்பட 8000 ராணுவம், போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் இன்று பிரான்சில் துவங்குகிறது.
ஒலிம்பிக் நீச்சலில் நான்கு பதக்கம் வென்ற பிரான்சின் புளோரன்ட் மனாவ்டோவ், உள்ளூரில் முதல் வீரராக ஜோதி ஏந்திச் செல்ல காத்திருக்கிறார்.
துவக்கம் முக்கியம்
ஒலிம்பிக் படகு வலித்தலில் மூன்று தங்கம் வென்ற, பாரிஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தலைவர் டோனி எஸ்டன்குயட் கூறுகையில்,'' ஒரு போட்டியின் துவக்கம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். இதனால் தான் விளையாட்டை அதிகம் நேசிக்கும் நகரங்களில் ஒன்றான மார்செய்லேவில் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்கிறோம்,'' என்றார்.

