/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அபினவ் அபாரம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 10
/
அபினவ் அபாரம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 10
ADDED : ஜூலை 16, 2024 10:08 PM

சீனாவின் பீஜிங் நகரில் 29வது ஒலிம்பிக் போட்டி (2008, ஆக., 8--24) நடந்தது. முக்கிய போட்டிகள் நடந்த பீஜிங் தேசிய மைதானம் பறவை கூடு போல அழகாக வடிவமைக்கப்பட்டது. 'டன்' கணக்கில் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த 'பேர்ட்ஸ் நெஸ்ட்' மைதானம் ரசிகர்களை கவர்ந்தது. சீன ஜிம்னாஸ்டிக் வீரரான லீ நிங், அரங்கத்தின் உயரமான பகுதியில் இருந்து கயிறு மூலம் பறந்து வந்து ஜோதியை ஏற்றினார்.
துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் சுஷில் குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர், வெண்கலம் வென்றனர்.
சீனா 51 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தையும், அமெரிக்கா 36 தங்கத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இந்தியா 1 தங்கம், 2 வெண்கலம் வென்று 50வது இடம் பிடித்தது.