/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்
/
இந்தியாவில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்
ADDED : ஏப் 05, 2025 11:35 PM

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியாவில் புதியதாக 10 பயிற்சி மைதானங்கள் அமைய உள்ளன.
உலகின் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்த இரு போட்டிகள் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளன.
இதனிடையே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) 141 வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,'' வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த ஆர்வமாக உள்ளோம்,'' என்றார். தற்போது இந்தியா சார்பில் ஒலிம்பிக், பாராலிம்பிக் நடத்த விண்ணப்பம் தெரிவித்து, ஐ.ஒ.சி., போட்டி நடத்தும் இடங்களை தேர்வு செய்யும் குழுவிடம், கடிதம் கொடுக்கப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதனால் 2036 ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்ல தயாராகும் வகையில், இந்தியாவில் புதியதாக 10 பயிற்சி மையங்கள் அமைக்க, மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. இதில் நவீன பயிற்சி வசதிகள் அனைத்தும் இருக்கும்.
கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் படி, தேர்வு செய்யப்பட்ட 150 வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு மையத்திலும் சிறப்பு பயிற்சியில் ஈடுபடுவர்.
கடந்த 2021ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு, ஜப்பான் இப்படித் தான் தயாரானது. இதுபோன்ற மையத்தில் இருந்து வந்தவர்கள் அதிக பதக்கம் வென்று தந்தனர்.