/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக்கில் இந்திய வில்வித்தை அணி
/
ஒலிம்பிக்கில் இந்திய வில்வித்தை அணி
ADDED : ஜூன் 24, 2024 10:21 PM

புதுடில்லி: இந்திய வில்வித்தை அணிகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளன.
பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11 ல் நடக்கவுள்ளது. இதற்கான வில்வித்தையில் (ரீகர்வ்) 2 தனிநபர், 2 அணி, ஒரு கலப்பு அணி என ஐந்து பிரிவுகளில் போட்டி நடக்க உள்ளன. இந்திய அணி நேரடியாக தகுதிபெறவில்லை.
நேற்று தகுதி பெறாத அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் ஒலிம்பிக் செல்லலாம். இந்த அடிப்படையில் ஆண்கள், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றது. இதில் தருண்தீப் ராய், தீபிகா குமாரி என இருவரும் நான்காவது முறையாக ஒலிம்பிக் செல்லவுள்ளனர்.
ஆண்கள் அணி: தருண்தீப் ராய், திராஜ், பிரவின் ஜாதவ்.
பெண்கள் அணி: தீபிகா குமாரி, பஜன் கவுர், அங்கிதா பகத்.
காம்பவுண்டு பிரிவு ஒலிம்பிக்கில் கிடையாது. இதனால், உலக கோப்பை தொடரில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற இந்தியாவின் ஜோதி, அதித்தி, பர்னீத் கவுர் கூட்டணி ஒலிம்பிக் செல்ல முடியாது.