/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தை: தீபிகா குமாரி ஏமாற்றம்
/
வில்வித்தை: தீபிகா குமாரி ஏமாற்றம்
ADDED : ஆக 03, 2024 11:26 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில் தீபிகா குமாரி, பஜன் கவுர் ஏமாற்றினர்.
நேற்று பெண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி களமிறங்கினார். முதல் போட்டியில் ஜெர்மனியின் மிட்செல்லி குரூப்பனை வென்றார். அடுத்து காலிறுதியில் தென் கொரியாவின் சுயியான் நமை எதிர்கொண்டார்.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் சுயியானை தீபிகா வென்றிருந்தார். இந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய தீபிகா, முதல் 3 செட் முடிவில் 4-2 என முன்னிலை பெற்றார். 4வது செட்டில் ஏமாற்ற ஸ்கோர் 4-4 என ஆனது. ஐந்தாவது செட்டிலும் சறுக்க, 4-6 என தோற்று வெளியேறினார். தொடர்ந்து தனது நான்காவது ஒலிம்பிக்கில் பங்கேற்ற தீபிகா குமாரி, இதுவரை ஒருமுறை கூட காலிறுதியை தாண்டவில்லை.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பஜன் கவுர், இந்தோனேஷியாவின் தியாநந்தாவுடன் மோதினார். ஐந்து சுற்று முடிவில் இருவரும் 5-5 என சம நிலை பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஷூட் ஆப்' போட்டியில் 8-9 என தோற்றார்.
இம்முறை கலப்பு அணிகளுக்கான பிரிவில் மட்டும் அன்கிதா பகத், திராஜ் பொம்மதேவரா ஜோடி, ஒலிம்பிக் வில்வித்தையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தனர். அரையிறுதியில் தோற்று, 4வது இடம் பெற்றனர். மொத்தத்தில் வில்வித்தை நட்சத்திரங்களின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது.