/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா * காத்திருக்கும் கடின சவால்
/
வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா * காத்திருக்கும் கடின சவால்
வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா * காத்திருக்கும் கடின சவால்
வரலாறு படைப்பாரா நீரஜ் சோப்ரா * காத்திருக்கும் கடின சவால்
ADDED : ஆக 08, 2024 12:00 AM

பாரிஸ்: ஈட்டி எறிதல் பைனல் இன்று இரவு நடக்கிறது. தகுதிச்சுற்றில் அசத்திய நீரஜ் சோப்ரா, கடின சவால்களை கடந்து வரலாறு படைக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஒலிம்பிக் தடகளத்தில் இன்று, ஈட்டி எறிதல் போட்டி பைனல் நடக்கிறது. இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.
'முதல்' நம்பிக்கை
தகுதிச்சுற்றில் 'பி' பிரிவில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா 26, முதல் வாய்ப்பில் 89.34 மீ., துாரம் எறிந்து, பைனலுக்கு முன்னேறினார். இந்த சீசனில் இவர் எறிந்த சிறந்த துாரமாக இது அமைந்தது. இதையடுத்து அடுத்த இரு வாய்ப்பில் பங்கேற்காத நீரஜ் சோப்ரா, உடனடியாக ஒலிம்பிக் கிராமம் சென்று, பைனலுக்கான பயிற்சியை துவக்கினார்.
இருப்பினும் இன்றைய பைனல், டோக்கியோ ஒலிம்பிக் போல அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் இம்முறை 9 பேர், 84 மீ., துாரத்துக்கும் அதிகமாக எறிந்துள்ளனர் (2021ல் 6 பேர்). இதில் 5 பேர் தங்களது முதல் வாய்ப்பில் இந்த துாரத்தை கடந்தனர்.
இதில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா, 88.63 மீ.,), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி, 87.76 மீ.,), அர்ஷத் நதீம் (பாக்., 86.59 மீ.,), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜாகுப் வாடில்ச் (செக் குடியரசு, 85.63 மீ.,) என, பலர் பைனலில் சவால் கொடுக்க காத்திருக்கின்றனர்.
இருப்பினும் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை காணப்படுகிறது. இன்று மீண்டும் தங்கம் வென்றால், எரிக் லெம்மிங் (சுவீடன், 1908-12), ஜான்னி மைரா (பின்லாந்து, 1920-24), ஜான் ஜெலெஸ்னி (செக் குடியரசு, 1992-96, 2000), ஆன்ட்ரியாசிற்குப் (நார்வே, 2008-08) பின், தங்கப்பதக்கத்தை தக்கவைக்கும் ஐந்தாவது வீரர் என சாதிக்கலாம்.
தவிர, சுதந்திர இந்தியாவில் சுஷில் குமார் (மல்யுத்தம்-வெள்ளி, வெண்கலம்), சிந்து (பாட்மின்டன்-வெள்ளி, வெண்கலம்), மனுபாகருக்கு (துப்பாக்கிசுடுதல்-2 வெண்கலம்) அடுத்து, ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற நான்காவது இந்தியர் ஆகலாம்.
பைனல் எப்படி
ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ் சோப்ரா உட்பட 12 பேர் இன்று களமிறங்குகின்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்பு தரப்படும். இதில் அதிகமாக எறியும் துாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பதக்கம் வழங்கப்படும்.