sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா * ஸ்பெயினை வீழ்த்தி அபாரம்

/

ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா * ஸ்பெயினை வீழ்த்தி அபாரம்

ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா * ஸ்பெயினை வீழ்த்தி அபாரம்

ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா * ஸ்பெயினை வீழ்த்தி அபாரம்

1


ADDED : ஆக 08, 2024 11:29 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:29 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 2-1 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றி, தலா ஒரு 'டிரா', தோல்வியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அரையிறுதியில் ஜெர்மனிக்கு எதிராக போராடி தோற்றது. நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினுடன் மோதியது.

போட்டியின் 6வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் அடித்த பந்து கோல் போஸ்ட்டை விட்டு விலகிச் சென்றது. 9 வது நிமிடம் ஸ்பெயின் வீரர் ஜோஸ் மரியா அடித்த பந்தை, இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து கைகொடுத்தார்.

போட்டியின் 18 வது நிமிடத்தில் இந்திய வீரர்கள் செய்த தவறு காரணமாக, ஸ்பெயின் அணிக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' தரப்பட்டது. இதில் மார்க் மிராலஸ் கோல் அடிக்க, இந்தியா 0-1 என பின்தங்கியது.

கோல் சமன்

29 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை அமித் ரோஹிதாஸ் வீணடித்தார். முதல் பாதி முடிய 21 வினாடி இருந்த போது, மீண்டும் 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். முதல் பாதியில் போட்டி 1-1 என சமனில் இருந்தது.

'திரில்' வெற்றி

இரண்டாவது பாதியில் போட்டியின் 33வது நிமிடம் மற்றொரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு வந்தது. மீண்டும் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. இதைச் சமன் செய்ய ஸ்பெயின் வீரர்கள் போராடினர். ஆட்டம் முடிய 7 நிமிடம் இருந்த போது, முரட்டு ஆட்டத்திற்காக சுக்ஜீத் சிங் 'கிரீன் கார்டு' பெற்று, 2 நிமிடம் வெளியேறினார்.

இதைப் பயன்படுத்தி கோல் அடிக்க முயற்சித்தனர் ஸ்பெயின் வீரர்கள். இருப்பினும் 'சீனியர்' கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை தாண்டி, கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

பிரதமர் பாராட்டு

பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில்,' இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் வென்றது சிறப்பு. அடுத்தடுத்த தலைமுறை பாராட்டும் வகையிலான இந்த சாதனை காரணமாக, ஹாக்கி விளையாட்டு நமது இளைஞர்களிடம் கூடுதல் பிரபலமாகும்,' என தெரிவித்துள்ளார்.

13 வது பதக்கம்

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 13வது பதக்கம் வென்றது.

* 8 தங்கம் (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) கைப்பற்றியது.

* 1960ல் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

* 1968, 1972, 2021, 2024 என நான்கு முறை வெண்கலம் வென்றது.



52 ஆண்டுக்குப் பின்...

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி 1968, 1972 என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது. தற்போது 2021, 2024 என அசத்திய இந்திய அணி, 52 ஆண்டுக்குப் பின் தொடர்ந்து இரண்டு வெண்கல பதக்கம் கைப்பற்றியது.

ஹர்மன்பிரீத் கவுர் '10'

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மொத்தம் 10 கோல் அடித்தார். இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் முதலிடம் பெற்றார்.

ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்ஸ் (7), ஜெர்மனியின் கிறிஸ்டோபர் (5), பெல்ஜியத்தின் ஹென்ரிக்ஸ் (5) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

* தவிர, ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய வீரர் அதிக கோல் அடித்த நிகழ்வு கடைசியாக 1964ல் நடந்தது. பிரித்பால் சிங் 10 கோல் அடித்து இருந்தார். தற்போது 60 ஆண்டுக்குப் பின் மன்பிரீத் சிங் இந்த சாதனை படைத்தார்.

ஸ்ரீஜேஷ் முடிவு மாறுமா

இந்திய ஹாக்கியின் 'தடுப்புச்சுவர்', கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் 38. கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர். 2006ல் அறிமுகம் ஆனார். 18 ஆண்டுகால பயணத்தை முடித்த இவர், நேற்று ஓய்வு பெற்றார். சர்வதேச ஹாக்கி அரங்கில் 336 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவர் கூறுகையில்,''ஹாக்கியில் நான் தொடர வேண்டுமென விரும்புகின்றனர். ஒலிம்பிக் பதக்கத்துடன் விடைபெறுவது தான் சிறந்த தருணம். எனது ஓய்வு முடிவில் மாற்றம் இல்லை,''என்றார்.

விழுந்து வணங்கினார்

சர்வதேச ஹாக்கியில் இருந்து விடைபெற்ற ஸ்ரீஜேஷ், நேற்று போட்டி முடிந்ததும், தனது 'ஹெல்மெட்டை' கோல் போஸ்ட் முன்பாக கழற்றி வைத்து, அப்படியே கீழே விழுந்து வணங்கி விடைபெற்றார்.



ஒரு கோடி பரிசு

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பஞ்சாப் மாநில அரசு ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளது.

'கடவுள்' ஸ்ரீஜேஷ்

ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்ட செய்தியில்,' ஸ்ரீஜேஷ் தனது கடைசி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 'தி மேன்', 'தி லெஜண்டு', 'தி கோட்', ஹாக்கியின் கடவுள் ஸ்ரீஜேஷ்,' என பாராட்டு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us