/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மல்யுத்தம்: அன்டிம் அதிர்ச்சி
/
மல்யுத்தம்: அன்டிம் அதிர்ச்சி
ADDED : ஆக 07, 2024 11:59 PM

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் இந்தியாவின் அன்டிம்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிகள் நடக்கின்றன. பெண்களுக்கான 68 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் நிஷா, காலிறுதியில் வெற்றி பெற இருந்தார். கடைசி 33 வினாடி இருந்த போது திடீரென ஏற்பட்ட வலது மணிக்கட்டு காயத்தால் தோல்வி அடைந்தார்.
50 கிலோ பிரிவில் வினேஷ் போகத், பைனலுக்கு முன்னேறினார். ஆனால் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று 53 கிலோ போட்டியில் இந்தியாவின் அன்டிம் பங்கேற்றார். இதில் எப்படியும் பதக்கம் வெல்வார் என நம்பிக்கை இருந்தது. 'ரவுண்டு-16' சுற்றில் துருக்கியின் எட்கிலை எதிர்கொண்டார்.
ஆனால் துவக்கத்திலேயே 4 புள்ளி விட்டுக் கொடுத்தார் அன்டிம். இதில் இருந்து மீள முயற்சித்தார். மறுபடியும் எட்கில் பிடியில் சிக்கினார் அன்டிம். கடைசியில் 0-10 என மோசமாக தோல்வியடைந்தார். அடுத்து எட்கில் பைனலுக்கு முன்னேறினால், வெண்கலப் பதக்கத்திற்கான 'ரெப்பிசாஜ்' போட்டியில் அன்டிம் பங்கேற்க வாய்ப்பு இருந்தது. ஆனால் எட்கில், அரையிறுதியில் ஜெர்மனியின் அன்னிகாவிடம் தோற்றார். அன்டிம் பதக்க வாய்ப்பு பறிபோனது.