/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
200 மீ., ஓட்டம்: லெட்சில் தங்கம்
/
200 மீ., ஓட்டம்: லெட்சில் தங்கம்
UPDATED : ஆக 09, 2024 01:11 AM
ADDED : ஆக 09, 2024 01:07 AM

பாரிஸ்: ஒலிம்பிக் 200 மீ., ஓட்டத்தில் லெட்சில் டெபோகோ, தங்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.784 வினாடி), தங்கம் வென்று, அதிவேக மனிதன் ஆனார்.
நேற்று ஆண்களுக்கான 200 மீ., ஓட்டம் பைனல் நடந்தது. இதில் நோவா லைல்ஸ், எர்ரியான் நிட்டன், கென்னத் பெத்நாரெக், ஜோசப் பல்புல்லே, என நான்கு அமெரிக்க வீரர்கள் உட்பட 8 பேர் பங்கேற்றனர்.
போட்டி துவங்கியதும் அனைவரும் 'மின்னல்' வேகத்தில் ஓடினர். லேன் 7ல் ஓடிய 21 வயது போட்ஸ்வானா வீரர் 19.46 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். 100 மீ., ஓட்டத்தில் இவர் 6வது இடம் பெற்றிருந்தார்.
அமெரிக்க வீரர் கென்னத் (19.62 வினாடி) வெள்ளி வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நோவா லைல்ஸ் (19.70), வெண்கலம் தான் கைப்பற்றினார்.