/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
முரளி ஸ்ரீசங்கருக்கு 'ஆப்பரேஷன்'
/
முரளி ஸ்ரீசங்கருக்கு 'ஆப்பரேஷன்'
ADDED : ஏப் 24, 2024 10:19 PM

தோகா: இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் இடது முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார்.
இந்திய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் 25. காமன்வெல்த் விளையாட்டு (2022), ஆசிய விளையாட்டில் (2022) வெள்ளி வென்ற இவர், கடந்த ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8.37 மீ., தாண்டி வெள்ளி வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26 -- ஆக. 11) தகுதி பெற்றார்.
ஷாங்காய் (ஏப். 27), தோகாவில் (மே 10) நடக்கவுள்ள டயமண்ட் லீக் போட்டிக்கு தயாராக கேரளாவின் பாலக்காட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போது ஸ்ரீசங்கரின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து குணமடைய 'ஆப்பரேஷன்' தேவைப்பட்டதால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஸ்ரீசங்கர் விலகினார்.
இந்நிலையில் கத்தார் தலைநகர் தோகாவில், ஸ்ரீசங்கரின் முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதுகுறித்து இவர் வெளியிட்ட செய்தியில், 'ஆப்பரேஷன் முடிந்து நலமாக உள்ளேன். அனைவரது ஆதரவுக்கும் நன்றி. ஏற்கனவே நடை பயிற்சியை துவக்கிவிட்டேன். காயத்தில் இருந்து மீண்டு, விரைவில் போட்டிக்கு திரும்ப முயற்சிப்பேன்,' என தெரிவித்திருந்தார்.

