/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
100 கிராம் எடை அதிகம்: வினேஷ் போகத் தகுதி நீக்கம்
/
100 கிராம் எடை அதிகம்: வினேஷ் போகத் தகுதி நீக்கம்
ADDED : ஆக 07, 2024 05:07 PM

பாரிஸ்: மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய இந்தியாவின் வினேஷ் போகத்,
பைனலுக்கு முன்னேறியதால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியான நிலையில்,
தற்போது அவர் 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதி நீக்கம்
செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது.
பிரான்ஸ்
தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் பிரீஸ்டைல் 50 கிலோ
பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் விளையாடினார்.
வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் வினேஷ் போகத், முதன்முறையாக
இப்பிரிவில் பங்கேற்றார். கியூபாவின் லோபசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி
முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன்மூலம் தங்கம்
அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்த
நிலையில், பைனலுக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100
கிராம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கிலோ பிரிவில் விளையாடும் வினேஷ்
போகத் 100 கிராம் அளவிற்கு எடை கூடியதால், ஒலிம்பிக் விதிப்படி தகுதி
நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது;
பைனலுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம்
அளிக்கப்படுகிறது. இப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என
ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா
இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்ற நிலையில், வெள்ளி அல்லது தங்கம்
கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வினேஷ் 100 கிராம் எடை கூடியதால்
தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்ததால் ரசிகர்கள்
அதிர்ச்சியடைந்தனர். 'வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது
வருத்தமளிக்கிறது' என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.