ADDED : ஆக 18, 2024 10:56 PM

மும்பை: வெஸ்டர்ன் இந்தியா பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.
மும்பையில் வெஸ்டர்ன் இந்தியா பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பில்லியர்ட்ஸ் பைனலில், ஓ.என்.ஜி.சி., அணியின் மகாராஷ்டிரா வீரர் பங்கஜ் அத்வானி, பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்.,) அணியின் தமிழக வீரர் ஸ்ரீகிருஷ்ணா மோதினர். இதில் 27 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி 822-520 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இவர், மும்பையில் நடந்த வெவ்வேறு தொடர்களில் தொடர்ச்சியாக 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பங்கஜ் அத்வானிக்கு கோப்பையுடன் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஸ்ரீகிருஷ்ணாவுக்கு ரூ. 1.20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

