/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'பாரா பவர்லிப்டிங்': வினய் 'தங்கம்'
/
'பாரா பவர்லிப்டிங்': வினய் 'தங்கம்'
ADDED : அக் 10, 2025 10:25 PM

கெய்ரோ: உலக 'பாரா பவர்லிப்டிங்' தொடரில் இந்தியாவின் வினய் தங்கம் வென்றார்.
எகிப்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஜூனியர் ஆண்கள் 72 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் வினய் பங்கேற்றார். முதலிரண்டு வாய்ப்புகளில் 137, 142 கிலோ துாக்கிய இவர், கடைசி வாய்ப்பில் 147 கிலோ துாக்கினார். ஆனால் 147 கிலோ துாக்கியது செல்லாது என நடுவர்கள் அறிவித்தனர். இருப்பினும் அதிகபட்சமாக 142 கிலோ துாக்கிய வினய், முதலிடத்தை உறுதி செய்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
போலந்தின் மிகோலாஜ் கோசியுபின்ஸ்கி (141 கிலோ), ஈகுவடாரின் செபாஸ்டியன் (137 கிலோ) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
உ.பி.,யை சேர்ந்த வினய், சர்வதேச அரங்கில் தனது 2வது பதக்கம் வென்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு எகிப்தில் நடந்த 'பாரா பவர்லிப்டிங்' உலக கோப்பையில் (ஜூனியர் 59 கிலோ) தங்கம் வென்றிருந்தார்.