/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 11 பதக்கம் * பாரா சைக்கிளிங் கோப்பையில்...
/
இந்தியாவுக்கு 11 பதக்கம் * பாரா சைக்கிளிங் கோப்பையில்...
இந்தியாவுக்கு 11 பதக்கம் * பாரா சைக்கிளிங் கோப்பையில்...
இந்தியாவுக்கு 11 பதக்கம் * பாரா சைக்கிளிங் கோப்பையில்...
ADDED : டிச 09, 2025 11:25 PM

கோரட்: பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார்.
தாய்லாந்தில் பாரா சைக்கிளிங் கோப்பை போட்டிகள் நடந்தன. மலேசியா, சீனா உட்பட 12 நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 10 பேர் களமிறங்கினர். தனிநபர் 'டைம் டிரையல்' (1 கி.மீ.,) பிரிவில் இந்திய வீராங்கனை லிசா தாஸ் 15, (அசாம்) வெள்ளிப்பதக்கம் வென்றார். விஷ்வா 16, (குஜராத்) வெண்கலம் கைப்பற்றினார்.
200 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் லிசா, வெள்ளி வசப்படுத்தினார். தவிர தனிநபர் பர்சூட் பிரிவு, டைம் டிரையல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவின் யோகேஷ், பிரஷாந்த் தனிநபர் போட்டிகளில் வெண்கலம் கைப்பற்றினர். ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தம் 11 பதக்கங்கள் கிடைத்தன.