/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாரிஸ் ஒலிம்பிக்: வினேஷ் தகுதி
/
பாரிஸ் ஒலிம்பிக்: வினேஷ் தகுதி
ADDED : ஏப் 20, 2024 10:16 PM

பிஷ்கெக்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றார்.
கிர்கிஸ்தானில் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதி போட்டி நடக்கிறது. இரண்டாவது நாளான நேற்று பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. வினேஷ் போகத், 50 கிலோ பிரிவில் களமிறங்கினார். தகுதிச்சுற்றில் 10-0 என மிரன் சியோனை (தென் கொரியா) வென்ற வினேஷ், காலிறுதியில் 2-0 என சம்நங்கை (கம்போடியா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதில் கஜகஸ்தானின் லாராவை எதிர்கொண்டார். வினேஷ் 10-0 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
* 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலிக், அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சோபிரோவாவை 10-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைய, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
* 76 கிலோ பிரிவில் இந்தியாவின் ரீத்திகா, அரையிறுதியில் சீன தைபேவின் டி சங்கை 7-0 என சாய்த்து பைனலுக்கு முன்னேறினார். பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றார்.
* 62 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மான்ஷி, வடகொரியாவின் கியாங் முனிடம் 0-6 என தோற்று, ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்.

