/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பி.டி.உஷா மீது வினேஷ் கோபம்
/
பி.டி.உஷா மீது வினேஷ் கோபம்
ADDED : செப் 11, 2024 11:07 PM

புதுடில்லி: ''பாரிசில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்றே தெரியவில்லை,'' என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ ('பிரீஸ்டைல்') பிரிவு பைனலுக்கு முன்னேறினார். பின் நடந்த எடை சோதனையில், 100 கிராம் கூடுதலாக இருக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என அப்பீல் செய்தார்.
அப்போது மருத்துவமனையில் வினேஷ் போகத்தை சந்தித்த, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, 'வினேஷிற்கு அனைத்து உதவியும் வழங்கப்படும்' என்றார். பின் வினேஷ் அப்பீலை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது.
இதுகுறித்து வினேஷ் போகத் கூறியது:
பாரிசில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்றே தெரியவில்லை. மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது, வெளியில் என்ன நடக்கிறது என நமக்குத் தெரியாது. அந்த நேரத்தில் என்னை பார்க்க வந்தார் பி.டி.உஷா. என்னுடைய அனுமதி இல்லாமல் போட்டோ எடுக்கப்பட்டது.
அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, எனக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொண்டார். அரசியலில் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் தான் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. அதுபோன்று தான் பாரிசில் அரசியல் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.