/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய மல்யுத்த சங்கத்துக்கு அனுமதி * தற்காலிக குழு கலைப்பு
/
இந்திய மல்யுத்த சங்கத்துக்கு அனுமதி * தற்காலிக குழு கலைப்பு
இந்திய மல்யுத்த சங்கத்துக்கு அனுமதி * தற்காலிக குழு கலைப்பு
இந்திய மல்யுத்த சங்கத்துக்கு அனுமதி * தற்காலிக குழு கலைப்பு
ADDED : மார் 18, 2024 11:02 PM

புதுடில்லி: இந்திய மல்யுத்த சங்கம் மீண்டும் செயல்பட அனுமதி கிடைத்தது. தற்காலிக குழு கலைக்கப்பட்டது.
இந்திய மல்யுத்த சங்க (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இவரை எதிர்த்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக் ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இந்திய மல்யுத்த சங்கத்தை, சர்வதேச அமைப்பு 'சஸ்பெண்ட்' செய்தது. அடுத்து நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவர் ஆனார். இதற்கு மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசு, டபிள்யு.எப்.ஐ., நிர்வாகத்துக்கு தடை விதித்தது. இதை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட தற்காலிக குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டது.
இதனிடையே சர்வதேச மல்யுத்த அமைப்பு, டபிள்யு.எப்.ஐ., மீதான 'சஸ்பெண்ட்டை' ரத்து செய்தது. இந்தியா சார்பில் ஆசிய மல்யுத்தத்தில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு முகாமை, டபிள்யு.எப்.ஐ., நடத்தியது.
தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,) வெளியிட்ட அறிக்கையில்,' டபிள்யு.எப்.ஐ., மீதான தடையை, சர்வதேச மல்யுத்த சங்கம் விலக்கியது. அடுத்து டபிள்யு.எப்.ஐ., சார்பில் ஒலிம்பிக் தேர்வு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. டில்லி உயர்நீதி மன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட தற்காலிக குழு கலைக்கப்படுகிறது. டபிள்யு.எப்.ஐ., நிர்வாகம் வழக்கம் போல செயல்பட அனுமதி தரப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.

