/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி
/
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி
ADDED : செப் 06, 2025 10:47 PM

விசாகப்பட்டனம்: புரோ கபடியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி, குஜராத்திடம் தோல்வியடைந்தது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 12-18 என பின்தங்கி இருந்தது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியினரால் எழுச்சி பெற முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 28-37 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் பவன் ஷெராவத் (6 புள்ளி), அர்ஜுன் தேஷ்வால் (5), நிதேஷ் குமார் (5) ஆறுதல் தந்தனர். குஜராத் சார்பில் நிதின் பன்வார் 8, ராகேஷ் 6, கேப்டன் முகமதுரேசா 6 புள்ளி பெற்றனர்.
இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 தோல்வி என தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி (2 புள்ளி) 10வது இடத்துக்கு முன்னேறியது.
பெங்களூரு வெற்றி: மற்றொரு லீக் போட்டியில் பாட்னா, பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 38-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் முதல் வெற்றியானது. பாட்னா அணி 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தது.