sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

/

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

புரோ லீக் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்


ADDED : ஜூன் 02, 2024 10:49 PM

Google News

ADDED : ஜூன் 02, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: புரோ லீக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி 1-3 என பிரிட்டனிடம் வீழ்ந்தது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்களுக்கான புரோ லீக் 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று லண்டனில் நடந்த லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-3' இந்திய அணி, 4வது இடத்தில் உள்ள பிரிட்டனை எதிர்கொண்டது. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் அணிக்கு பான்டுராக் நிக்கோலஸ் 2 கோல் (2, 11வது நிமிடம்) அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 0-2 என பின்தங்கி இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்தியாவுக்கு 35வது நிமிடத்தில் அபிஷேக் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, 47வது நிமிடத்தில் பிரிட்டனில் கால்னன் வில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இப்போட்டியில் 8 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்த இந்தியா ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இதுவரை விளையாடிய 14 போட்டியில், 8 வெற்றி, 6 தோல்வி என 24 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது.

லண்டனில் நடந்த பெண்களுக்கான புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் நவ்னீத் கவுர் (34வது நிமிடம்), ஷர்மிளா தேவி (56வது) தலா ஒரு கோல் அடித்தனர்.






      Dinamalar
      Follow us