ADDED : செப் 09, 2025 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் டில்லி அணி 45-34 என பெங்காலை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், பெங்கால், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி தபாங், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, டில்லி அணியின் தொடர்ச்சியான 4வது வெற்றியாக அமைந்தது. டில்லி அணிக்கு அஷூ மாலிக் அதிகபட்சம் 16 புள்ளிகள் எடுத்து கைகொடுத்தார்.