UPDATED : அக் 22, 2024 11:15 PM
ADDED : அக் 22, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 52-22 என்ற புள்ளிக்கணக்கில் கலக்கல் வெற்றி பெற்றது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி, 18-13 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தனர். முடிவில் ஜெய்ப்பூர் அணி 52-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி சார்பில் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் 19, அபிஷேக் மாலிக் 8 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.