தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ராகுல் கொடுத்த பரிசு: மைதான ஊழியர் நெகிழ்ச்சி

ராகுல் கொடுத்த பரிசு: மைதான ஊழியர் நெகிழ்ச்சி

ராகுல் கொடுத்த பரிசு: மைதான ஊழியர் நெகிழ்ச்சி


ADDED : நவ 09, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெலிங்டன்: இந்தியாவின் கே.எல். ராகுல், தனக்கு பரிசாக கிடைத்த அலைபேசியை மைதான ஊழியருக்கு வழங்கினார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. வெலிங்டனில் நடந்த 2வது போட்டியில் மழை குறுக்கிட, இந்திய அணி ‘டக்வொர்த்–லீவிஸ்–ஸ்டர்ன்’ விதிமுறைப்படி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்திய அணி 2–0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கவுள்ளது.

இரண்டாவது போட்டியில் பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு கைகொடுத்த இந்தியாவின் கே.எல். ராகுலுக்கு, ‘கேம் சேஞ்சர் ஆப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது. இதற்காக அவருக்கு, அலைபேசி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. அதனை, மைதானத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கினார். ராகுலின் இச்செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), தனது சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து ராகுலை வெகுவாக பாராட்டி உள்ளது.

மைதான பெண் ஊழியர் கூறுகையில், ‘‘தனக்கு பரிசாக கிடைத்த அலைபேசியை ராகுல் எனக்கு வழங்கினார். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த அன்பான செயலால் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us