தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'ரவுண்ட்-அப்'

'ரவுண்ட்-அப்'

'ரவுண்ட்-அப்'


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்பெயின் வீரர் சாம்பியன்

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் ரபெல் ஜோடர், அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா மோதினர். இரண்டு மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய டேவிடோவிச் போகினா 1-6, 7-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார். தவிர இது, இவரது 3வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம்.

மான்செஸ்டர் சிட்டி வெற்றி

மான்செஸ்டர்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, இப்ஸ்விச் டவுன் அணிகள் மோதின. எர்லிங் ஹாலண்ட் (34, 69வது நிமிடம்), பில் போடன் (19வது) கைகொடுக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் செல்சி அணி 2-0 என, எவர்டன் அணியை வென்றது.

பார்சிலோனா கோல் மழை

மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ரியல் பெடிஸ், பார்சிலோனா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா அணி 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 9 போட்டியிலும் வென்ற பார்சிலோனா அணி 27 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us