தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் கென்ய வீரர் சார்லஸ் மடாட்டா (58 நிமிடம், 52 வினாடி) சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் பிரிவில் எத்தியோப்பியாவின் உதினேஷ் அலெமு (ஒரு மணி நேரம், 6 நிமிடம், 35 வினாடி) முதலிடத்தை கைப்பற்றினார்.

* கோலாலம்பூரில் நடந்த மலேசிய ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் பைனலில் (17 வயது) இந்தியாவின் லோகேஷ் சுப்ரமணி 3-0 (11-6, 11-2, 11-8) என, மலேசியாவின் முகமது இப்வத் சுல்கிப்லியை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

* அமெரிக்காவின் லாஸ் வேகாசில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயது) நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' அரையிறுதியில் இந்தியாவின் ஜஸ்கரன் சிங் (65 கிலோ), சந்தர்மோகன் (79 கிலோ) தோல்வியடைந்தனர்.

* உ.பி., மாநிலம் ஜான்சியில் சீனியர் ஆண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. இதன் 'டிவிசன்-ஏ' காலிறுதியில் ஹரியானா அணி 5-1 என, சண்டிகர் அணியை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் பஞ்சாப் அணி 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் மஹாராஷ்டிராவை வென்றது. மற்ற காலிறுதியில் மத்திய பிரதேசம் (5-3, எதிர்: பெங்கால்), உ.பி., (4-2, எதிர்: மணிப்பூர்) அணிகள் வென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us