தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இத்தாலி வீரர் சாம்பியன்

ஆஸ்டின்: அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில், சர்வதேச ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயம் நடந்தது. இலக்கை ஒரு மணி நேரம், 35 நிமிடம், 16.650 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த மெர்சிடஸ் அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி 20, சாம்பியன் பட்டம் வென்றார். இது, நடப்பு சீசனில் இவர் வென்ற 9வது பட்டம். சிறந்த டிரைவருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆன்டோனெல்லி (365 புள்ளி), அடுத்து மெக்சிகோ சிட்டியில் நடக்கவுள்ள போட்டியில் ‘டாப்–9’ வரிசையில் இடம் பிடிக்கும் பட்சத்தில், முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

ரியல் மாட்ரிட் வெற்றி

பார்சிலோனா: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கிளப் கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. பார்சிலோனா நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதின. எம்பாப்வே 2 கோல் (41, 87வது நிமிடம்) அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணிக்கு ராபின்ஹா (61வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி

மான்செஸ்டர்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கிளப் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் ஏமாற்றிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 0–3 என, போர்ன்மவுத் அணியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் லிவர்பூல் அணி 2–0 என, பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியன் அணியை வென்றது. நியூகேசில் யுனைடெட் அணி 2–0 என, கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us