தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஜெர்மனியில், ஹைலோ ஓபன் ‘சூப்பர் 500’ பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா சென், கிரண் ஜார்ஜ், அஷ்மிதா, தேவிகா சிஹாக், ஆகர்ஷி காஷ்யப், மாளவிகா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* கிரிக்கெட் லீக் தொடருக்கான சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி நீக்கப்பட்டார்.

* கபடி சாம்பியன்ஸ் லீக் 2வது சீசனுக்கான பிவானி புல்ஸ் அணியில், இந்திய வீரர் தேவாங்க் தலால் ரூ. 21.20 லட்சத்திற்கு தக்கவைக்கப்பட்டார். இவர், சமீபத்தில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

* சென்னையில், வரும் அக். 30ல் சோலா செஸ் ஓபன் முதல் சீசன் துவங்குகிறது. மொத்தம் 8 நாட்கள் நடக்கும் இத்தொடரில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, லியோன் லுாக் மென்டோன்கா உள்ளிட்ட 32 கிராண்ட்மாஸ்டர்ஸ் பங்கேற்கின்றனர்.

* கஜகஸ்தானில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், ‘கிரிகோ–ரோமன்’ எடைப்பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சுனில் குமார் (87 கிலோ), சாஹில் (63), சச்சின் சஹ்ராவத் (67) தோல்வியடைந்தனர்.

* செனகலில், வரும் அக். 31 முதல் நவ. 13 வரை சம்மர் யூத் ஒலிம்பிக் நடக்கவுள்ளது. இதில் சின்ட்ரேலா தாஸ் (டேபிள் டென்னிஸ்), தினிதி தேசிங்கு (நீச்சல்), தான்வி பத்ரி (பாட்மின்டன்) உள்ளிட்ட 17 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

* மான்டினேக்ரோவில் நடக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (19 வயது) அரையிறுதியில் (55 கிலோ) இந்தியாவின் ஆனந்த் 5–0 என, அஜர்பெய்ஜானின் நிஹாத் காசிமோவை வீழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us