ADDED : அக் 30, 2026 04:34 AM

காலிறுதியில் ரிபாகினா
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், டபிள்யு.டி.ஏ., பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, யுலியா புடின்ட்சேவா மோதினர். இதில் ரிபாகினா 6–2, 6–3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 3–6, 5–7 என, சுலோவாகியாவின் மியா போஹன்கோவாவிடம் தோல்வியடைந்தார்.
இன்டர் மயாமி ‘டிரா’
மயாமி: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. மயாமி நகரில் நடந்த லீக் போட்டியில், இன்டர் மயாமி, சின்சினாட்டி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 2–2 என, ‘டிரா’ ஆனது. மற்றொரு போட்டியில் நியூயார்க் சிட்டி அணி 2–1 என, அட்லாண்டா யுனைடெட் அணியை வீழ்த்தியது. டொரான்டோ அணி 2–1 என, டி.சி., யுனைடெட் அணியை வென்றது. மான்ட்ரியல் அணி 0–4 என, சார்லோட்டி அணியிடம் வீழ்ந்தது.
லிவர்பூல் அணி அபாரம்
லண்டன்: இங்கிலாந்தில், இங்கிலீஷ் கால்பந்து லீக் 67வது சீசன் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் செல்சி, லிவர்பூல் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என சமநிலையில் இருந்தது. பின், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அசத்திய லிவர்பூல் அணி 6–5 என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணி 1–0 என, புல்ஹாம் அணியை வென்றது.
