தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


ADDED : அக் 30, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஜெர்மனியில் நடக்கும் ஹைலோ ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா 11–21, 17–21 என, கனடாவின் வென் யு ஜாங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் இஷாராணி 14–21, 19–21 என, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க்கிடம் வீழ்ந்தார்.

* கிரிக்கெட் லீக் தொடருக்கான மும்பை அணியில் இருந்து, பவுலிங் பயிற்சியாளர்களான லசித் மலிங்கா, பராஸ் பாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் கார்ல் ஹாப்கின்சன், விடுவிக்கப்பட்டனர்.

* ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், சப்–ஜூனியர், ஜூனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உ.பி., வீரர் யூஷா நபீஸ், உ.பி., வீராங்கனை உன்னதி திரிபாதி சாம்பியன் பட்டம் வென்றனர்.

* அஜர்பெய்ஜானில், ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து (15 வயது) தொடர் நடக்கிறது. இதன் 81–88வது இடத்துக்கான காலிறுதியில் இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இனி, 85–88வது இடத்துக்கான அரையிறுதியில் இந்திய அணி, கஜகஸ்தானை சந்திக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us