தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 07:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இத்தாலி வீரர் வரலாறு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடந்த ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா–1’ கார்பந்தயத்தில், ‘ரெட் புல் ரேசிங் – ரெட் புல் போர்டு’ அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் ஆனார். மூன்றாவது இடம் பிடித்த ‘மெர்சிடஸ்’ அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி, சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். ‘பார்முலா–1’ வரலாற்றில் இளம் வயதில் (20) உலக சாம்பியன் பட்டம் வெல்லும் வீரரானார் ஆன்டோனெல்லி. இதற்கு முன், 2010ல் செபாஸ்டியன் வெட்டல், 23 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

ஸ்வெரேவ் ‘நம்பர்–1’

ரோம்: ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசை வெளியானது. ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 2வது இடத்தில் இருந்து முதல் முறையாக ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றினார். இப்பட்டியலில் முதலிடம் பிடித்த 30வது வீரரானார் ஸ்வெரேவ். இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 3வது இடத்தில் நீடிக்கிறார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 11வது இடத்துக்கு முன்னேறினார்.

ஆர்சனல் அணி அசத்தல்

லிவர்பூல்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கிளப் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லிவர்பூல் நகரில் நடந்த லீக் போட்டியில் ஆர்சனல், லிவர்பூல் அணிகள் மோதின. இதில் ஆர்சனல் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆன்பீல்டு மைதானத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆர்சனல் அணி, லிவர்பூல் அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 9 போட்டியில், 8 வெற்றி, ஒரு தோல்வி என 24 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us