தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’

‘ரவுண்ட்–அப்’


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பைனலில் ஜப்பான் வீராங்கனை

யோசு: தென் கொரியாவில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற கொரிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி, சீனதைபேயின் ஹசியாங் டி லின் மோதினர். அபாரமாக ஆடிய அகானே யமாகுச்சி 21–16, 21–12 என வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவின் ஆன் சே யங் 21–16, 21–12 என, ஜப்பானின் ஹினா அகேச்சியை வீழ்த்தினார். பைனலில் யகானே யமாகுச்சி, ஆன் சே யங் மோதுகின்றனர்.

அரையிறுதியில் அல்காரஸ்

பாரிஸ்: பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இதில் அல்காரஸ் 6–7, 7–5, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், டாமி பால் மோதினர். இதில் ஷெல்டன் 6–4, 4–6, 6–3 என வெற்றி பெற்றார்.

எவர்டன் அணி வெற்றி

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லிவர்பூல் நகரில் நடந்த லீக் போட்டியில் எவர்டன், கோவன்ட்ரி சிட்டி அணிகள் மோதின. இதில் எவர்டன் அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 10 போட்டியில், 4 வெற்றி, 4 ‘டிரா’, 2 தோல்வி என, 16 புள்ளிகளுடன் எவர்டன் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. லிவர்பூல் அணி (15 புள்ளி) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us