UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 08:55 PM

சபலென்கா, மிர்ரா அபாரம்
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், உலகின் ‘டாப்–8’ வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையரில் பிரிவு 2ல் நடந்த போட்டியில் பெலாரசின் சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவா மோதினர். இதில் சபலென்கா 7–6, 7–5 என போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 6–4, 6–0 என எளிதாக வீழ்த்தினார். ‘பிரிவு 1’ல் நடந்த போட்டிகளில் செக் குடியரசின் லிண்டா, அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றனர்.
ஹாரி கேனுக்கு ‘நோ’
லண்டன்: ‘பிப் புரோ வேர்ல்டு 11’ கால்பந்து சங்கத்தின் சார்பில் 2005 முதல், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள் இடம் பெற்ற அணி தேர்வு செய்யப்படுகிறது. 73 நாடுகளின் 19,806 வீரர், வீராங்கனைகள் ஓட்டுப்பதிவு செய்வர். இம்முறை 2026 ம் ஆண்டின் சிறந்த வீரர்கள் இடம் பெற்ற அணி விவரம் வெளியானது.
அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரான்சின் எம்பாப்வே, நெதர்லாந்தின் எர்லிங் ஹாலண்ட், ஸ்பெயின் லமின் யமால் உட்பட 11 பேர் இடம் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருது வென்ற, இங்கிலாந்தின் ஹாரி கேனுக்கு, இதில் இடம் கிடைக்கவில்லை. ‘லெவன்’ பட்டியலில், சிறந்த வீரர் விருது வென்ற ஒருவர் இடம் பெறாதது இது தான் முதன் முறை.
