ADDED : நவ 18, 2026 06:13 PM

அரையிறுதியில் ஸ்வெரேவ்
டுரின்: இத்தாலியின் டுரின் நகரில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. உலகின் ‘டாப்–8’ வீரர்கள், இரு பிரிவுகளாக ‘ரவுண்டு–ராபின்’ முறையில் லீக் சுற்றில் விளையாடுகின்றனர். ‘ஜான் மெக்கன்ரோ’ பிரிவு லீக் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஏற்கனவே முதல் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை வீழ்த்திய ஸ்வெரேவ், தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தார்.
காலிறுதியில் நார்வே
கோபன்ஹேகன்: ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து 5வது சீசன் நடக்கிறது. டென்மார்க்கில் நடந்த ‘குரூப்–4’ லீக் போட்டியில் டென்மார்க், நார்வே அணிகள் மோதின. ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் எர்லிங் ஹாலண்ட் ஒரு கோல் அடித்து கைகொடுக்க, நார்வே அணி 3–2 என, ‘திரில்’ வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடந்த மற்றொரு ‘குரூப்–4’ லீக் போட்டியில், போர்ச்சுகல், வேல்ஸ் அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் அணி 3–2 என, வெற்றி பெற்றது. ‘குரூப்–4’ லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த போர்ச்சுகல் (15 புள்ளி), நார்வே (9) காலிறுதிக்கு முன்னேறின.
